Monday, 30 September 2019

'சின்ன தளபதி'..! பிக்பாஸ் கவினுக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டம்... விஜய் ரசிகர்கள் காட்டம்


பிக்பாஸ் நிகழ்ச்சியி சர்ச்சைக்குரிய போட்டியாளரான நடிகர் கவினுக்கு அவரது ரசிகர்கள் கொடுத்திருக்கும் பட்டம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

சரவணன் மீனாட்சி சீரியல், நட்புன்னா என்னனு தெரியுமா திரைப்படம் ஆகியவற்றில் நாயகனாக தோன்றி இருந்தவர் நடிகர் கவின். இந்த பிரபலத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

கண்டெண்ட் கொடுக்கிறேன் என்று வந்த வேகத்தில், அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரிடமும் கடலை போட்டது, வெளியே தனக்காக ஓட்டுப்போட ஒரு நிறுவனத்தையே செட் செய்தது என பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது வைக்கப்பட்டு சர்ச்சைக்குரியஒருவராகவே வலம்வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் அளித்த 5 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு, 95வது நாளில் வெளியேறிய அவருக்கு சின்ன தளபதி என பட்டம் அளித்து புகழ்ந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். இதனை கண்டு கடுப்பான விஜய் ரசிகர்கள் பலர், கவினின் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். 
Disqus Comments
'