Wednesday, 4 September 2019

ஒரு இஸ்லாமிய பெண்ணாக இருந்தும் குஷ்பு செய்த விஷயம்..! மனம் திறந்து பாராட்டிய நடிகை கஸ்தூரி


இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து மும்பையில் வளர்ந்த நடிகை குஷ்பு, தமிழ் சினிமாவில் அடியெடுத்து, தமிழரை திருமணம் செய்து இன்று ஒரு முழு தமிழச்சியாகவே மாறி இருக்கிறார்.

இப்படி பட்ட குஷ்புவின் சமீபத்திய நடவடிக்கையை புகழ்ந்து பதிவிட்டு இருக்கிறார் நடிகை கஸ்தூரி. பெரும்பாலும் விமர்சனங்களை மட்டுமே முன்வைப்பவரான நடிகை கஸ்தூரியை பாராட்டவும் வைத்தது குஷ்பு வின் ஒரு சமூக வலைதள பதிவு.

அதாவது தனது இல்லத்தில் விநாயக சதுர்த்தியை கொண்டாடிய நடிகை குஷ்பு அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதற்கு கருத்து தெரிவித்த கஸ்தூரி, 'இந்தியாவை கண்டு எனக்கு பெருமையாக உள்ளது. மும்பையை சேர்ந்த இஸ்லாமிய பெண், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஹிந்துவை மணந்து, இரு மத நம்பிக்கைகளுக்கும் உண்மையாக இருக்கும் உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்' என நெகிழ்ந்து பதிவிட்டு இருந்தார்.

    
Disqus Comments
'