Monday, 9 September 2019

விவசாயிகளுக்காக 42 லட்சம் நன்கொடை...! சர்ச்சை நடிகையை கொண்டாடும் ரசிகர்கள்


நடிகர் க்ரித்திக் ரோஷனுடனான உறவு, பத்திரிக்கையாளருடன் சண்டை என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி பாலிவுட்டின் சர்ச்சை நாயகி என பெயரெடுத்த, கங்கனா ராணட்டின் சமீபத்திய பங்களிப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

பல லட்சம் விவசாயிகளின் விவசாய தேவைக்கும், கோடிக்கணக்காக மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் காவிரி ஆற்றினை காக்கும் நோக்கத்தோடு, ஈஷா மையத்தின் சத்குரு 'காவிரியின் கூக்குரல்' என்கிற இயக்கத்தை துவங்கினார்.

இந்த இயக்கத்தின் மூலம், காவிரி ஆற்றின் கரையை பலப்படுத்தும் விதமாக, கரையை ஒட்டி சுமார் 25 கோடி மரங்களை நடும் பணியில் இவ்வியக்கம் செயல்பட்டு வருகிறது. இதற்கு நன்கொடை திரட்டும் நோக்கில், பொதுமக்கள் மரத்திற்கு 42 ரூபாய் வீதம் தங்களால் முடிந்த தொகையை கொடுத்து உதவ விளம்பரங்கள் வெளியானது.

இந்நிலையில் இவ்வியக்கத்தில் பங்குபெற்ற நடிகை கங்கனா, 1 லட்சம் மரங்களுக்கு பொறுப்பேற்று சுமார் 42 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். இது குறித்து பேசிய அவர், 'நாள் தோறும் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன, அவற்றிற்கு பதிலாக கண்டிப்பாக நாம் மரங்கள் நடவேண்டும்.


இல்லையெனில் சுவாசிக்க காற்று இன்றி அவதிப்படுவோம். மேலும் இத்திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அதிகரித்து  அவர்களுக்கு பெரும் அளவில் உதவும். தங்கள் பட விளம்பரங்களுக்கு மட்டும் வந்து பேசும் பிரபலங்கள் இது போன்ற நல்ல திட்டங்கள் பற்றியும் குரல் கொடுக்க வேண்டும்' என பேசி இருந்தார்.

இவரது இந்த பங்காளிக்கு, அவரை விமர்சித்து மட்டுமே வந்த நெட்டிசன்களையும் பாராட்ட வைத்துள்ளது.
Disqus Comments
'