Friday, 6 September 2019

ஒன்றல்ல இரண்டல்ல '1,00,000' மரங்கள் நடும் காஜல்...! குவியும் பாராட்டுக்கள்


ஈஷா சத்குரு சார்பில் இந்திய அளவில் ஆறுகளை இணைக்கும் நிகழ்வு, லட்சக்கணக்கான தன்னார்வலர்கள் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக காவிரி ஆற்றினை ஒட்டி கிட்டத்தட்ட 25 கோடி மரங்களை நட இவ்வமைப்பு திட்டமிட்டு இருக்கிறது.

காவிரி ஆற்றினை கரையை பலப்படுத்தவும் அதே சமயம் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இந்த திட்டம் உதவும் என்கிற காரணத்தினால், அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் என பலதரப்பட்டவர்களும் இந்த நிகழ்வுக்கு தங்களால் முடிந்த ஆதரவை அளித்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகை காஜல் அகர்வால், தன் சார்பில் ஒருலட்சம் மரங்களை நட்டு பராமரிக்க உறுதி எடுத்து இருக்கிறாராம். மேலும் தனது இந்த நடவடிக்கைக்கு ரசிகர்களிடம் அவர் உதவி கோரியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர்.



Disqus Comments
'