Wednesday, 4 September 2019

ஆபாச உரையாடல்கள், அந்தரங்க வீடியோக்கள்... மீரா மிதுனிடம் சிக்கும் முன்னனி நடிகர்கள்??


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனாலும், அதற்கு முன்னதாகவே 'மிஸ் தமிழ்நாடு' போட்டி சர்ச்சையில் சிக்கி செய்திகளில் இடம் பிடித்தவர் மீரா மிதுன்.

இவர் குறித்து அத்துறையை சார்ந்த ஜோ மைக்கேல் என்பவர் கொலை முயற்சி, மோசடி என தொடர்ந்து ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் இவரது நேர்காணல்கள்தான் ட்ரெண்டிங்.

இப்படி இருக்க அவர் வெளியிட்டிருக்கும் தகவல், தமிழ் திரைத்துறையை சார்ந்த நடிகர்களை பீதியில் ஆழ்த்தும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதாவது, மீராவின் முன்னாள் மேனேஜர் மூலம் கிடைத்த ஹார்ட் டிஸ்கில்,
பிரபல நடிகர்கள் பலர் மீராவுடன் நெருக்கமாகவும் அந்தரங்கமாகவும் பேசும் உரையாடல்கள், ஒரு சில வீடியோக்கள் இருப்பதாக ஜோ மைக்கேல் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்து இருக்கிறார்.


மேலும் 'பணத்திற்காக பலருக்கு கற்பழிப்பு பழி மிரட்டல்கள் விடுத்திருக்கும் மீரா மிதுன், அதே வழியில் உங்களையும் மிரட்டலாம். அதனால் மீராவுடன் போனில் பேசியவர்கள், பேசுபவர்கள் கொஞ்சம் உஷாராக இருங்கள்' எனவும் எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மீரா, 'விட்டால் என் ஆபாச வீடியோவையும் வெளியிடுவேன் என மைக்கேல் கூறுவான். அப்படி உண்மையிலேயே உன்னிடம் ஏதும் இருந்தால் வெளியிடு நானே பார்க்கிறேன்' என ஆவேசமாக பேசி இருக்கிறார்.

Disqus Comments
'