Wednesday, 11 September 2019

ஓவர் பில்டப்பு, இப்போ திமிர் வேற...! முன்னணி நடிகரையே சீண்டிய சுட்ட இயக்குனர்


முன்னணி நடிகரின் நண்பரையே இழிவு படுத்திய  இயக்குனருக்கு 'திமிர் அதிகமாகிவிட்டது' என விமர்சிக்கின்றனர் திரையுலகினர்.

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும் இவரது படங்கள் 'எங்கேயோ சுட்டது போல இருக்கிறதே' என தொடர் விமர்சனங்களுக்கும் ஆளானது. அதனால் இவர் சுட்ட இயக்குனர் என ரசிகர்களால் செல்லமாகவும் அழைக்கப்படுபவர்.

இப்படி பட்ட இயக்குனர் முன்னணி நடிகரை வைத்து படம் இயக்க, குறிப்பிட்ட நடிகரை படப்பிடிப்பில் பார்க்க வந்த அவரது நெருங்கிய நண்பரையே இழிவு படுத்தி அனுப்பி இருக்கிறார்.

விஷயம் அறிந்த நடிகரோ, இயக்குனரை திட்டி தீர்த்துடன் இரண்டு தினங்கள் படப்பிடிப்புக்கும் டிமிக்கி கொடுத்து நம் இயக்குனரை அலற விட்டிருக்கிறார்.
Disqus Comments
'