Sunday, 8 September 2019

திட்டமிட்டதை விட 7.5 மடங்கு அதிகமாகவே சாதித்த 'சந்திராயன்-2'..! 'இஸ்ரோ' வெளியிட்ட இன்ப செய்தி..!!!


நிலவில் தென் துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் நானுப்பப்பட்ட சந்திராயன் 2 செயற்கைகோளின் விக்ரம் லாண்டர் இறுதி நேரத்தில் தொடர்பை இழந்து மாயமானது. இது மாபெரும் சாதனையை எதிர்நோக்கி காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயத்தையும் சுக்கு நூறாக்கியது.

இந்நிலையில் துவண்டு போய் இருக்கும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் இஸ்ரோ ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறது.  இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், 'தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயான விக்ரம் லேண்டரின் சிக்னலை திரும்ப பெற இன்னும் வாய்ப்புகள் உள்ளது.

வருகிற 14 நாட்கள் தொடர்ச்சியாக விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிப்போம். மேலும் 'சந்திராயன் 2 ஆர்பிட்டர்' வெறும் ஓராண்டுக்கு செயல்படும் திட்டத்திலேயே அனுப்பப்பட்டது.

ஆனால் எரிபொருள் மிக மிக குறைவான அளவிலேயே செலவாகி இருக்கும் நிலையில், அது 7.5 ஆண்டுகள் வரை தடையின்றி செயல்பட்டு, நிலவு முழுவதையும் புகைப்படம் எடுக்கும் வேலைகளை கட்சிதமாக செய்யும்.

சந்திராயன்-2 வை பொறுத்தவரை 95% வெற்றிபெற்றுவிட்டோம்,  5% தோல்வி எங்களுக்கு தடையாகிவிடவில்லை, பிரதமர் மோடியின் நம்பிக்கையான வார்த்தைகளால் இஸ்ரோ அடுத்த கட்ட நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்திருக்கிறது'  என்றிருந்தார்.
Disqus Comments
'