Saturday, 14 September 2019

'6' மனைவிகள் இருந்தும் அடங்காத ஆசை...! '5 வயது' மகளையே கற்பழித்த '50 வயது' தந்தை


5 வயது குழந்தையை ஈவு இரக்கமின்றி கற்பழித்த கொடூர தந்தை திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் ஷான் பாஸா. 50 வயதான இவருக்கு மொத்தம் 6 மனைவிகள். இந்த திருமணங்கள் மூலம் 4 மகன்கள் 7 மகள்களும் இவருக்கு வாரிசுகளாக இருக்கின்றனர்.

கூலித்தொழியான இவர் மற்றும் மனைவிகள், குழந்தைகள் அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே இல்லத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி வேலை முடிந்து திரும்பிய பாஸா,

இரவு 8 மணி அளவில் வீட்டில் எவரும் இல்லா சமயத்தில், வெளியே விளையாடிக்கொண்டிருந்த தன் 5 வயது மகளை, உள்ளே அழைத்து சென்று கற்பழித்து இருக்கிறார்.

இதனால் சிறுமி கதறி அளவே, சத்தம் கேட்டு வந்த தாயார், நடந்த கொடூரத்தை கண்டு கூச்சல் போட்டு அருகிலிருந்தோரை உதவிக்கு அழைத்தார். உதவிக்கு வந்தவர்கள் பாஷாவை பிடிக்க முயன்றனர். என்றாலும் அவர் அங்கிருந்து தப்பினார்.

மேலும் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பெயரில் ஷான் பாஷா கைது செய்யப்பட்டார்.       
Disqus Comments
'