Saturday, 7 September 2019

வனிதா பார்த்த வேலை... முறிந்தது 'தர்சன்-ஷனம் ஷெட்டி' காதல்...! கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட காதலி


பிக்பாஸ் மூன்றாவது நிகழ்ச்சியின் வெற்றி போட்டியாளராக வருவார் என எதிர்பார்க்கப்படும் தர்சனுடனான காதலை முறித்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அவரது காதலி ஷனம் ஷெட்டி.

இலங்கையை சேர்ந்த விளம்பர மாடலான தர்சன், அதே துறையில் பணியாற்றிவந்த ஷனம் ஷெட்டியை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே காதலித்து வந்தார்.   

இருவருக்கும் இடையேயான உறவு குறித்து ஷனம் ஷெட்டியே நேர்காணல்களில் பேசி இருந்த நிலையில், தற்பொழுது தர்ஷனுடனான காதலை முறித்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த முடிவிற்கு காரணாமாக, போட்டியாளர் வனிதா, இருவருக்குமிடையேயான காதலை காரணம் காட்டி, ஷெரினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும். இது தர்சனுக்கு பின்னடைவை ஏற்படுத்தவது போல இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் குறிப்பிட்ட வீடியோவில் நான் தர்சனின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன் ஒழிய, அவருக்கு தடையாக இருக்க அல்ல. நமது காதலை முறித்து கொள்வோம். இனி தர்சனை பற்றி எந்த நேர்காணலில் பேச மாட்டேன் என கண்ணீருடன் பேசி இருக்கிறார்.  
Disqus Comments
'