Wednesday, 25 September 2019

சின்மயானந்த்தின் உல்லாச வீடியோ...! ஆபாச இணையதளங்களில் வெளியானதால் அதிர்ச்சி


முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆதாரமாக 43 வீடியோக்களை சம்பந்தப்பட்ட மாணவி காவல் துறையிடம் ஒப்படைத்தார். என்றாலும் தற்பொழுது, சின்மயானந்திடம்   பணம் கேட்டு மிரட்டியதாக மாணவி மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இது ஒரு புறம் சென்று கொண்டிருக்க மாணவி சமர்ப்பித்த 43 வீடியோக்களில், ஒன்று ஆபாச இணையதளத்தில் வெளியாகி காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

உடலில் ஒட்டு துணி இல்லாமல் படுத்திருக்க, சின்மயானத்துக்கு மாணவி மசாஜ் செய்து விடும் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோ, 'காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தும் வெளியிட்டது யார்' என காவல் துறையினர் தற்பொழுது விசாரித்து வருகின்றனர்.
Disqus Comments
'