Monday, 9 September 2019

பெண்கள் கழிப்பறையில் மாணவியிடம் சில்மிஷம்..! 47 வயது ஆசிரியர் வெறிச்செயல்


பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருக்கோவிலூரை அடுத்த திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ரங்கராஜன்(47).

இவர் 5ம் வகுப்பு மாணவி ஒருவரை, வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்ததோடு, கடந்த செப்டம்பர் 4ம் தேதி பள்ளியில் கழிப்பறை சென்ற மாணவியை பின்தொடர்ந்து வந்து கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்க, காவல்துறையை தொடர்புகொண்டு, ஆசிரியர் ரங்கராஜனின் லீலைகளை புகாராக அளிக்கப்பட்டது. பின்பு விரைந்து வந்த காவல் துறை, போக்க்ஷே சட்டத்தின் கீழ் ஆசிரியரை கைது செய்து சிறையிலடைத்தனர்.   
Disqus Comments
'