Sunday, 15 September 2019

கள்ளக்காதலனுடன் உல்லாசம்... தொல்லை கொடுத்த மகளையே கொன்ற தாய்...


கள்ளக்காதலனுடன் உறவில் ஈடுபட்டதை நேரில் கண்ட குழந்தை அவரது தாய், கள்ளக்காதலன் தாக்கியதில், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வியாசர்பாடி கக்கன்ஜி பகுதியை சேர்ந்தவர் பவானி, இவர் தனது கணவர் ரமேஷ் என்பவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு யாழினி (4), ராஜேஷ் (1) என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.

கணவரை பிரிந்த பின்னர், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஆசிப் என்கிற இளைஞர் அவ்வப்போது பவானி வீட்டிற்கு வந்து சென்று கள்ள காதலனாக உல்லாசம் அனுபவித்து இருக்கிறார்.

இந்நிலையில் வழக்கம் போல தகாத உறவில் ஈடுபட, அந்நேரத்தில் யாழினி வீட்டிற்குள் வந்து உறவுக்கு இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளகாதலர்கள், யாழினியை அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர்.

இதனால் யாழினியும் இறந்து விட, 'உடல்நல கோளாறால் மகள் இறந்துவிட்டால்' எனக்கூறி தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட முயன்றனர். என்றாலும் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக பவானியின் கணவர் போலீசில் புகார் அளிக்க, பிரேத பரிசோதனையில் சிறுமி தாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு,

பவானி மற்றும் அவரது கள்ளக்காதலன் யாஷிப் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
Disqus Comments
'