Sunday, 15 September 2019

ஓவர் கான்ஃபிடன்சால் வந்த விபரீதம்...! இந்தவாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தானாம்


பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓவர் கான்ஃபிடன்ஸில் தலைவர் பதவியை விட்டுக்கொடுத்த தர்ஷன் நூலிழையில் தப்பி இருக்கிறார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் 12வது வாரம் முடிவுக்கு வர இருக்கிறது. சென்றவாரம் எலிமினேஷனில் சீக்ரட் ரூம் அனுப்பப்பட்டதால் தப்பினார் சேரன்.

மேலும் இந்த வாரத்துக்கான எவிக்சனில், வனிதா, சாண்டி, கவின், ஷெரின் மற்றும் தலைவர் பதவியை ஓவர் கான்பிடன்ஸில் விட்டுக்கொடுத்த தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் நடத்தப்படும் அதிகாரபூர்வமற்ற, அதே சமயம் 95% அதிகாரபூர்வ வாக்கெடுப்புடன் ஒத்துபோகும், ஓட்டு எண்ணிக்கையின் படி குறைந்த வாக்குகளை பெற்ற வனிதா வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  


சென்ற வாரம்வரை, 'இவர் எலிமினேட் செய்யப்பட வாய்ப்பே இல்லை' என ரசிகர்களால் கருதப்பட்ட தர்ஷன், ஓவர் காண்பிடண்ஸ் மற்றும் இந்தவாரம் ஏதும் சொல்லிக்கொள்ளும்படி செய்யாத காரணம் ஆகியவற்றால் வனிதாவை விட ஓராயிரம் வாக்குகளே அதிகம் பெற்று நூலிழையில் தப்பி இருக்கிறார்.

ஏன், எவரும் எதிர்பாராத படி அவரே இன்று வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.



Disqus Comments
'