Thursday, 12 September 2019

லொஸ்லியா அப்பா போட்ட போடு!!! எக்கச்சக்கமாக எகிறிய 'TRP'... களைகட்டிய பிக்பாஸ்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று லொஸ்லியாவுக்கு அவரது தந்தை விட்ட டோஸ், அந்நிகழ்ச்சியில் TRPயை எக்கச்சக்கமாக எகிற வைத்து விட்டதாம்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் லொஸ்லியா. இவரது குடும்பம், கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு வந்திருக்கும் மிடில் கிளாஸ் குடும்பம். சொல்லப்போனால் இவரது தந்தை இன்று வரை கனடாவில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படியொரு கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்து, கவினுடன் அவர் நடத்திய காதல் லீலைகள் அவரது குடும்பத்தினரை தலை குனிய செய்ததாகவே தெரிகிறது.

இதனால் நேற்றைய ப்ரீஸ் டாஸ்கில், பிக்பாஸ் வீட்டினுள் 10 வருடங்களுக்கு பின் முதல் முறையாக மகளை நேரில் சந்திக்க வந்திருந்தாலும், தங்களை கேவலப்படுத்திவிட்டதாக லொஸ்லியாவை கண்டித்தார் அவரது தந்தை.

தந்தையின் கோபம் மக்களின் கோபமாக இருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட, லொஸ்லியாவின் தந்தைக்காக அந்நிகழ்ச்சியை கண்டனர். இதனால் இந்த சீசனிலேயே அதிக பார்வைகளை பெற்ற எபிசோடாக நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட் அடித்து இருக்கிறது.  
Disqus Comments
'