Thursday, 5 September 2019

வனிதாவையே வாயடைக்க வைத்த ஷெரின்..! மிரண்டு போன ரசிகர்கள்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் ரசிகர்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறார் நடிகை ஷெரின்.

எலிமினேஷனை தாண்டியும் ரீ-என்ட்ரி கொடுத்து போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் படாத பாடு படுத்தி வருகிறார் வனிதா. பிறர் பேசும் சிறு விஷயங்களையும் பெரிது படுத்தி பிரச்சனையாக்கி விடும் இவரை, வாக்குவாதத்தில் அடித்து கொள்ள பிக்பாஸ் வீட்டினுள் ஆளே இல்லை என்கிற நிலை இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றில், தர்சன் ஷெரின் உடனான உறவை கொச்சை படுத்துவது போல வனிதா பேச, கோபத்தில் பொங்கி எழுந்த ஷெரின் வனிதாவே வாயடைத்து போகும்படி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இதனை கண்டு ரசிகர்கள் பலரும் 'வனிதாவுக்கே டஃப் கொடுக்குறாரே ஷெரின்', என வியந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Disqus Comments
'