Friday, 13 September 2019

ஒரு நொடியில் பறிபோன உயிர்...! பேனர் விபத்தின் வீடியோ வெளியானது


சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த பொறியாளர் பெண் பேனர் சரிந்ததில் நிலை தடுமாறி லாரியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுக கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஜெய்கோபால் இல்ல திருமணத்திற்கு  சாலை நெடுக பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றில் ஒன்று சரிந்து விழுந்ததில் பல்லாவரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவத்தின் காணொளியினை வெளியிட்டு இருக்கிறது பிரபல செய்தி சேனலான புதிய தலைமுறை. குறிப்பிட்ட வீடியோவில் கண்ணிமைக்கும் நேரத்தில் பேனர் சரிவதும், இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ லாரிக்குள் விழும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.





Disqus Comments
'