Friday, 13 September 2019

பிரசவத்தில் இறந்து போன தங்கை... குழந்தையை '7500'-ரூபாய்க்கு விற்ற அக்கா... கோவையில் பரபரப்பு


பிரசவத்தின் போது தங்கை இறந்துவிட்ட நிலையில் அவரது குழந்தையை,  7500 ரூபாய்க்கு அவரது சகோதரி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவையை சேர்ந்த 22 வயது இளம்பெண் திருமணத்திற்கு முன்னதாகவே கருத்தரித்த நிலையில், சூலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் துரதிஷ்டவசமாக அந்த பெண் இறந்துவிட, தங்கையின் உடலை சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு பெண்ணின் சகோதரி மற்றும் அவரது கணவர் அனுப்பி வைத்தனர்.

தங்கையின் குழந்தை தனது பொறுப்பில் இருந்து வந்த நிலையில், அவர்களது வீட்டின் அருகே வசித்து வந்த குழந்தை இல்லாத ராஜன், செல்வி தம்பதிக்கு 7500 ரூபாய்க்கு சகோதரி விற்றிருக்கிறார்.

இது குறித்து தகவல் அறிந்த சைல்ட் லைன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் உமா தேவி, சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் குழந்தையை வாங்கிய தம்பதியை போலீசார் விசாரித்து வருவதுடன், குழந்தையின் தந்தையை கண்டறியும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.    
Disqus Comments
'