Thursday, 5 September 2019

பிரபல பாடகியின் 'டூப்'பை வைத்து ஏமாற்றிய நிறுவனம்..! 72,00,00,000 ரூபாய்க்கு ஆப்பு வைத்த பாடகி


அனுமதி இன்றி தனது டூப் போட்டு விளம்பரம் எடுத்த நிறுவனத்தின் மேல் 72 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கிறார் பிரபல அமெரிக்க பாடகி.

ஹாலிவுட்டில் முன்னணி பாடகியாக வலம்வருபவர், அரியானா கிராண்டே. இசை வீடியோக்கள் மூலம் பிரபலமானவரான இவர், அண்மையில் 'Forever 21' என்ற நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்ததாக தெரிகிறது.

விஷயம் என்னவென்றால் குறிப்பிட்ட பாடகி போலவே தோற்றம் அளிக்கும் பெண் ஒருவருக்கு, பாடல் ஒன்றில் அவர்தோன்றி இருந்தது போலவே உடை, ஹேர் ஸ்டைல் அணிவித்து, அவரது  பாடல் வரிகளையும் பயன்படுத்தி விளம்பர போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறது அந்த நிறுவனம்.

இது குறித்து அறிந்த பாடகி, 'அனுமதி இன்றி தனது அடையாளத்தை 'Forever 21' நிறுவனம் அவர்களது விளம்பரத்திற்கு பயன்படுத்தி இருப்பதாகவும்', அதனால் 'தனக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும்' எனவும் கோரிக்கை விடுத்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.     
Disqus Comments
'