Wednesday, 11 September 2019

20 வயது இளமை தோற்றத்தில் 'அஜித்' - இணையத்தில் லீக்கான 'தல 60' கெட்டப்


நடிகர் அஜித் 20வது வயது இளைஞர் போல தோற்றமளிக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என அடுத்தடுத்து சால்ட் அண்ட் பேப்பர் லுக்கிலேயே வந்து அசத்தினாலும் தல அஜித்தை இளமையான தோற்றத்தில் காண முடியவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்நிலையில் ரசிகர்களின் இக்குறையை நிவர்த்தி செய்யும் படி வெளியாகி இருக்கிறது புகைப்படம் ஒன்று. நேர்கொண்ட பார்வை திரைப்பட வெற்றிக்கு பின்னர், H.வினோத்தின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித்.

இத்திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட் திரைப்படங்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது, தற்பொழுது அதன் போனஸாக க்ளீன் ஷேவ், கருப்பு நிற தலைமுடி என இளமையான தோற்றத்தில் அஜித் இருக்கும் புகைப்படமும் வெளியாகி ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தளித்து இருக்கிறது.  
Disqus Comments
'