Monday, 23 September 2019

விடாது துரத்தும் அரசியல்வாதிகள்...! ஆர்மி நடிகைக்கும் துளிர்விட்ட ஆசை


இன்று சினிமா நடிகர்கள் முதல், சின்னத்திரை நடிகர்கள் வரை நெட்டிசன்கள் ஆர்மி துவங்கதற்கு அடித்தளமிட்டவர் இந்த நடிகை.

ஆள் அட்ரஸே தெரியாமல் இருந்தவர், ஓவர் நைட்டில் ஒபாமா ஆகி ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை அடித்தார். இதனால் படவாய்ப்புகளும் குவிய அநியாய சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை தெறிக்க விட்டார்.

சினிமா வாய்ப்புகள் இன்றி, மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு கருதி அரசியல் வாய்ப்புகளும் அவரது வீடு தேடி வந்தன. என்றாலும் வந்தவை சிறு சிறு கட்சிகள் என்கிற காரணத்தினாலும், ஆர்வமின்மை காரணமாகவும் தட்டி கழித்த அவருக்கு, தற்பொழுது அரசியல் ஆசை துளிர்விட்டு இருக்கின்றதாம்.  

படவாய்ப்புகளும் இல்லை என்கிற காரணத்தினால், இந்த முடிவிற்கு வந்துள்ள ஆர்மி நடிகை, பெரிய பெரிய அரசியல்கட்சிகளில் சீட் கேட்டு கல் ஏறிய துவங்கி இருக்கிறாராம்.
Disqus Comments
'