Saturday, 14 September 2019

தமிழ்நாடுன்னா '5 கோடி'க்கு ஒரு பைசா குறையாது.. கேரளாவுக்கு '40 லட்சம்' போதும்.. முன்னணி நடிகையின் தாராளம்


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் இந்த நடிகை. ஆரம்பத்தில் கவர்ச்சியை அள்ளிவீசி நடித்தவர் தற்பொழுது இழுத்து போர்த்திக்கொண்டுதான் நடிக்கிறார்.

என்றாலும் அம்மணியின் மார்க்கெட் எகிறிக்கொண்டேதான் இருக்கிறது. தற்பொழுது 3ம் கட்ட நாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவர், கதை என்னதான் அருமையாக இருந்தாலும் ஒரு நயா பைசா சம்பளத்தில் இருந்து விட்டு கொடுத்ததில்லை.

இந்த கெடுபிடிகள் தமிழ் சினிமாவுக்கு மட்டும் தான் போல. இவர் அண்மையில் நடித்த மலையாள திரைப்படம் ஒன்றிற்கு தனது சம்பளத்தை பண்ணிரண்டு மடங்குகள் குறைத்து வெறும் 40லட்சத்தை சம்பளமாக பெற்று இருக்கிறார்.

இதனை அறிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களோ, 'மலையாள திரையுலகுக்கு மட்டும் தாராளமா?' என புலம்பி வருகின்றனர்.  
Disqus Comments
'