Saturday, 14 September 2019

'அஜித்-விஜய்' மட்டும் ஒஸ்தி..? நான் என்ன தக்காளி தொக்கா..? கடுகடுத்த முன்னணி நாயகன்


அஜித், விஜய் போன்ற நடிகர்களின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறது இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர்களுடன் பேட்டி, யூட்யூப் நேர்காணல்களை அறவே தவிர்த்து விடுகின்றனர்.

இப்படியொரு நிலையில், அவர்களை அடுத்து முன்னணி நடிகராக டாப் 5க்குள் வலம்வருகிறார் ஒரு நடிகர். இவரை நேர்காணல் ஒன்றிற்கு வருமாறு அழைப்பு விடுத்தது பிரபல பொழுதுபோக்கு இணையதளம்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் அதன் பின் கூறிய வார்த்தைகள் தான் இப்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. 'என்னை நேர்காணலுக்கு அழைத்தது போல அஜித்-விஜயை அழைப்பீர்களா.?' என அழைப்பு விடுத்தவர்களிடன் கடிந்து கொண்டிருக்கிறார் அந்த நடிகர்.

அதாவது 'அஜித்-விஜய் ஆகியோரின் செய்கை முன்னணி நடிகர்களுக்குரியது என புரிந்து கொண்ட அந்த நடிகர், 'நானும் முன்னணி நடிகர்தான். நானும் நேர்காணல்களில் கலந்து கொள்ளமாட்டேன்' என்ற மனநிலைக்கு வந்திருப்பதே இந்த பதில் வெளிப்படுத்தி இருக்கிறது' என கிசு கிசுத்து வருகின்றன கோலிவுட் வட்டாரங்கள்.  
Disqus Comments
'