Sunday, 8 September 2019

லாரிக்கடியில் விழுந்தும் உயிர்தப்பிய பெண்..! எமனுக்கே தண்ணி காட்டிய அதிர்ச்சி காணொளி...


லாரிக்கடியில் விழுந்தும் அதிர்ஷ்டவசமாக  மயிரிழையில் உயிர்தப்பிய பெண்ணின் திக் திக் நிமிடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் பெண்களால் ஏற்படும் வாகன விபத்துகள் அதிகம். இதில் துரதிஷ்ட வசமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட காணொளியில் இடம்பெற்றிருக்கும் பெண்ணோ மயிரிழையில் உயிர் பிழைத்து எமனுக்கே தண்ணி காட்டி இருக்கிறார்.

டிராபிக் சிக்னலில் நிற்க பொறுமை இன்றி, லாரிக்கு இடையே புகுந்த செல்ல முயற்சிக்கிறார் இளம்பெண் ஒருவர். அந்த நேரத்தில் பச்சை விளக்கு எரிய, அவரை கவனிக்காத ஓட்டுனரோ, லாரியை இயக்கி விடுகிறார்.

இதனால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் லாரிக்கடியில் சென்ற பெண், அதிர்ஷ்டவசமாக டயர்களில் சிக்காமல், உயிர்பிழைத்து வெளிவருகிறார். பிளைண்ட் ஸ்பாட் எனப்படும் ஓட்டுனரால் காண முடியாத பகுதியில் அப்பெண் கடந்து சென்றதே அவ்விபத்துக்கு காரணம் எனும் நிலையில், அந்த பெண்ணையே திட்டி தீர்த்து வருகின்றனர் சமூக வலைதளவாசிகள்.

Disqus Comments
'