Monday, 9 September 2019

அவரோட நடிக்கணும்.. அரசியலில் குத்திக்கணும்..! முரட்டு குத்து நாயகியின் முரட்டு ஆசை


இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் தனது டபுள் மீனிங் வசனங்கள் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றதால் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

பின்னர் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வாய்ப்பு கிடைக்க, மேலும் பிரபலமானார். இந்நிலையில் இவர் நடிப்பில் ஸாம்பி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்திரைப்பட பிரமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டார்.

அதில் 'உங்களது எதிர்கால லட்சியம் என்ன?' என்று கேள்வி எழுப்பட, 'எனக்கிருப்பதோ இரண்டே ஆசைகள் தான், ஒன்று தல அஜித்தின் ஒரு படத்தில் சிறிய வேடத்திலாவது நடிப்பது. இன்னொன்று அரசியலில் களமிறங்கி முழு நேர சேவகியாக சமூக சேவை செய்வது' என கூறி ரசிகர்களை தலையில் அடித்துக்கொள்ள வைத்திருக்கிறார். 
Disqus Comments
'