Friday, 27 September 2019

படப்பிடிப்பிலும் பப்ஜி..! நடிகர்களையும் ஆட்டிப் படைக்கும் பப்ஜி மோகம்...


பப்ஜி எனப்படும் ஆன்லைன் மொபைல் வீடியோகேம் அறிமுகமான ஒரு வருடத்திலேயே அதிக பேரால் விளையாடப்பட்டு மாபெரும் புரட்சி செய்தது. இந்த விளையாட்டிற்கு பலர் அடிமையாகி உயிரைவிடும் அளவுக்கு விபரீதங்களை சென்று கொண்டிருக்கிறது.

இதனால் இந்த வீடியோ கேமிற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பப்ஜி மோகம் சாதாரண மக்கள் மட்டுமின்றி, சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பு மக்களையும் ஆட்டி படைத்து வரும் தகவலும் வெளிவந்துள்ளது.

குறிப்பாக தமிழ் சினிமாவில், நடிகர் ஜெயம் ரவி தான் பப்ஜி விளையாட்டு பிரியன் என நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார். மேலும் நடிகர் தனுஷ் படப்பிடிப்பில் ஃப்ரீயாக இருக்கும் போது கருணாஸ் மகன் கென், பாடகர் டீஜே ஆகியோருடன் இணைந்து பப்ஜி விளையாடி பொழுதை கழித்த தகவலும் தற்பொழுது வெளிவந்துள்ளது.

நடிகர்கள் மட்டுமல்லாது, காதலில் விழுந்தேன், மாசிலாமணி, நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்த நடிகை சுனைனாவும் தான் ஒரு பப்ஜி ரசிகை என வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். 

முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் விமானத்திற்காக காத்திருந்த சமயத்தில் ஒன்றாக இணைந்து பப்ஜி ஆடிய புகைப்படத்தையும் இந்திய கிரிக்கெட் ஆணையம் வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Disqus Comments
'