Monday, 9 September 2019

'பப்ஜி' விளையாட வீடு புகுந்து செல்போன் திருட்டு.!!! 10ம் வகுப்பு மாணவர்களின் விபரீத செயல்


பப்ஜி எனப்படும் ஆன்லைன் மொபைல் கேம் விளையாட செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை, பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

சமீபகாலமாகவே பப்ஜி வீடியோ கேமினால் ஏற்படும் விபரீதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து இந்த வீடியோகேமை விளையாடிய காரணத்தினால் இளைஞர்கள் பக்கவாதம் வந்து படுத்து, கழுத்து நரம்பு அறுபட்டு இறந்தது என தொடர்ந்து அதிர்ச்சிகர சம்பவங்கள் நிகழ்ந்தேறி வருகின்றன.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் சிறுவர்கள் இருவர் வீடுபுகுந்து செல்போன் திருட முயன்று அங்கிருந்தோரிடம் வசமாக சிக்கினர். மேலும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,

போலீசார்  சிறுவர்களை விசாரித்தனர், அப்பொழுது 'பள்ளி நண்பர்களை போல தாங்களும் பப்ஜி கேம் விளையாட விரும்பிய நிலையில், போன் திருட முயன்றதாக சிறுவர்கள் ஒப்புக்கொண்டனர்.    
Disqus Comments
'