Wednesday, 11 September 2019

இத்தனை பெண்களை சீரழித்தும் 'வைரமுத்து'வுக்கு வந்த வாழ்வு...! புலம்பும் பாடகி சின்மயி


'மீடூ' இயக்கத்தின் வாயிலாக கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாலியல் குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் நடிகை சின்மயி. அவரை தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் வைரமுத்து மீது முன்வைக்கப்பட்ட நிலையில், சில காலம் பொது நிகழ்ச்சிகள் பேட்டிகளை  தவிர்த்து வந்த அவர் தற்பொழுது சகஜ வாழ்க்கைக்கு திரும்பி இருக்கிறார்.

மேலும் ஒரு படி மேலே போய், மணிரத்னம் அவர்கள் இயக்கும் பிரமாண்ட திரைப்படமான 'பொன்னியின் செல்வன்'னுக்கு பாடலாசிரியராகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இது குறித்த சர்ச்சை தேசிய அளவிலான ஊடகங்கள் A.R. ரஹ்மானிடம் வைரமுத்து பற்றி கேள்வி எழுப்ப, 'இதை விட, படம் பற்றி பேச நிறைய இருக்கிறது' என தவிர்த்தபோதே வெடித்தது.  

மேலும் தற்பொழுது இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பாடகி சின்மயி, மீடூ இயக்கம் இன்று பலரையும் பாலியல் குற்றங்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறது. பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

என்றாலும் வைரமுத்து அவர்களின் வாழ்வில் எனது பாலியல் குற்றச்சாட்டுகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியது போல தெரியவில்லை, என இது குறித்த தனது அதிருப்தியினை தெரிவித்து இருக்கிறார்.




Disqus Comments
'