Monday, 9 September 2019

இளநீர் சீவ '32,000' ரூபாய் சம்பளம்...! வேலையில்லா பட்டதாரிகளை அதிர வைத்த வேலைவாய்ப்பு


பொறியியல் உள்ளிட்ட பட்டபடிப்புகளை படித்து விட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் இன்றி தவித்து வருகின்றனர்.
ஒரு சிலருக்கு வேலை கிடைத்தாலும், 7000-8000 என சொற்ப சம்பளத்திற்கே கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது.

இந்நிலையில், இப்படி பட்ட சூழ்நிலைகளில் சிக்கித்தவிக்கும் வேலை இல்லா பட்டதாரிகளையும், அடிமாட்டு விலைக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களையும் ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைத்திருக்கிறது சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்பு விளம்பரம்.

குறிப்பிட்ட விளம்பரத்தில் இளநீர் சீவ தெரிந்தால் தகுதிக்கேற்ப, 22,000ரூபாய் முதல் 32,000 ரூபாய் வரை சம்பளம், விருப்பமுள்ளவர்கள் '9840824174' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி, பலரது கவனம் ஈர்த்திருக்கிறது.



     
Disqus Comments
'