Tuesday, 10 September 2019

'2.0' திரைப்படத்தை சூடம் ஏற்றி கொண்டாடிய சீன ரசிகர்கள்..! ரியல் பவர் ஆஃப் சூப்பர் ஸ்டார்


தமிழ் சினிமாவிலேயே ஏன் இந்திய சினிமாவிலேயே உலக அளவில் ரசிகர்களை கொண்ட ஒரு சில நடிகர்களுள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும்  ஒருவர். இவரது இந்த பிரபலத்தை நிரூபிக்கும் விதத்தில் நிகழ்ந்தேறி இருக்கிறது சுவாரஸ்ய சம்பவம்.

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்து வெளியான திரைப்படம் 2.O. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்திற்கு கடல் கடந்தும் நல்ல வரவேற்புகள் கிடைத்தது.

மேலும் இத்திரைப்படம் சீன நாட்டில், சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டும் அண்மையில் சுமார் 40,000 திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் இத்திரைப்படத்தை வரவேற்கும் பொருட்டு சீன ரசிகர்கள் சிலர்,

தமிழக ரசிகர்களை போல 2.O திரைப்பட கட் அவுட்டுக்கு சூடம் ஏற்றிகொண்டாடினர். ரஜினியின் கடல் கடந்த செல்வாக்கை நிரூபிக்கும் இந்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 
Disqus Comments
'