Tuesday, 20 August 2019

தமிழகத்துக்காக உயிரையே விட துணிந்தாரா மதுமிதா..? அவிழும் பிக்பாஸ் மர்மம்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 50 நாட்களை கடந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் போட்டியாளர் மதுமிதா கையில் வெட்டுக்காயத்துடன் வெளியேற்றப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தேறியது.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த காரணத்தினால் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பேசப்பட்டு வருகிறது. என்றாலும் உள்ளே என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் மர்மமாகவே இருந்து வந்தது.


இதற்கிடையே உள்ளே என்ன நிகழ்ந்தது என்பது குறித்த அதிர்ச்சிகர தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி டாஸ்க் ஒன்றின் போது, கர்நாடக காவேரி பிரச்சனை குறித்து மது பேசியதாகவும், அதற்கு மற்றொரு போட்டியாளரும் கர்நாடகத்தை சேர்ந்தவருமான ஷெரின் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.


 இது சம்பந்தமான வாக்கு வாதத்தின் போது, 'எதெற்கெடுத்தாலும் தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்கள் என்கிறாயே அவர்களுக்காக உயிரை கொடுப்பாயா?' என்ற கேள்வி எழுந்ததாகவும், தனது நிலைப்பாட்டின் உறுதி தன்மையை நிரூபிக்க மதுமிதாவுவும் கையை அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மதுமிதாவின் நெருங்கிய நண்பரும், பிக்பாஸ்   இரண்டாவது சீசன் போட்டியாளருமான டேனியல் பாலாஜியும் இந்த தகவலை உறுதி படுத்துமாறு பேசி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 
Disqus Comments
'