Friday, 5 July 2019

விற்பனைக்கு வந்த விஜயின் 'பிகில்' காஸ்டியூம்..! சூடு பிடித்த வியாபாரம்


நடிகர் விஜயின் பிகில் திரைப்பட காஸ்டியூம் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் அசத்தி இருக்கிறார்.

இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அண்மையில் வெளியாகி இருந்த நிலையில், அதில் நடிகர் விஜய் உடுத்தி இருந்தது போன்ற ஆடைகளை பிரபல துணிக்கடை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

விஜய் முகமுடியுடன், குறிப்பிட்ட உடைகளை அணிந்து மாடல் பொம்மைகள், நடிகர் விஜய் போலவே போஸ் கொடுக்க, வழக்கம் போல விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு அந்த உடைகளை வாங்கி செல்ல துவங்கி இருக்கின்றனர்.
Disqus Comments
'