Monday, 15 July 2019

நான் தர்ஷனை காதலிக்கிறேன்..! வெளிப்படையாக ஒப்புக்கொண்ட மாடல் அழகி


பிக்பாஸ் வீட்டில் தர்ஷன்-மீரா இடையே காதல் பிரச்சனை வெடித்துள்ள நிலையில், அவருக்கு வெளியே ஒரு காதலி இருப்பது குறித்த தகவல் வெளிவந்தது.

அதுவும் குறிப்பாக சனம் ஷெட்டி எனும் ஒரு மாடல் அழகியை அவர் காதலிப்பதாக ஏற்கனவே ஒரு பேச்சு அடிபட்டு வந்த நிலையில், அதனை உறுதி படுத்தும் படி பேசி இருக்கிறார் அந்த மாடல் அழகி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் கலந்து கொள்ள மேடை ஏறிய போது, ஒரு பெண்ணின் முகம் அதிகம் போகஸ் செய்யப்பட்டது. அதிலிருந்தே இவர் தர்சனுக்கு நெருக்கமான ஒருவர் என ரசிகர்கள் பேச துவங்கி இருந்தனர்.



இந்நிலையில் நேர்காணல் ஒன்றிலும் பேசி இருந்த சனம் செட்டி எனும் அந்த பெண், 'லட்சக்கணக்கான பெண் ரசிகைகள் தாங்கள் தர்சனை காதலிப்பதாக என் சமூக வலைதள பக்கங்களிலேயே கருத்து தெரிவிக்கின்றனர்.

அப்படி இருக்க நான் மட்டும் ஏன் சொல்ல கூடாது. ஆமாம் நான் தர்சனை காதலிக்கிறேன். அவர் காதலிக்கிறாரா என்பதை அவர் வெளியே வந்ததும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' என பதிலளித்து இருந்தார்.    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();