Wednesday, 3 July 2019

"எங்களை நெருங்க கூட முடியாது" - ஹாலிவுட்டுக்கே தண்ணி காட்டும் தமிழ்ராக்கர்ஸ்


தமிழ் சினிமாவின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவரும் தமிழ் ராக்கர்ஸ் இப்பொழுது ஹாலிவுட் கண்ணிலும் விரலை விட்டு ஆட்ட துவங்கி இருக்கிறது.

பாண்டவர் அணி வந்தால் என்ன, பாக்யராஜ் அணி வந்தால் என்ன யாராலும் எங்களை நெருங்க கூட முடியாது எனும் போக்கில் தடுக்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

ஏற்கனவே தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என வட இந்தியா வரை பிரபலமாகிவிட்ட தமிழ் ராக்கர்ஸ் தற்பொழுது ஹாலிவுட் வரை பிரபலமாகி இருக்கிறது.

இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு இருக்கும் வியாபாரத்தை உணர்ந்த ஹாலிவுட், தொடர்ந்து இந்திய மொழிகளில் குறிப்பிட்ட மொழிகளில் பிரபலமான நட்சத்திரங்களின் குரலிலேயே படங்களை ரிலீஸ் செய்து வருகிறது.

வழக்கம் போல அந்த படங்களையும் HD தரத்தில், முதல் நாளிலேயே வெளியிட்டு அட்டூழியம் செய்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ். இது ஹாலிவுட் தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்த, அந்த இணையதளத்தை முடக்கும் முயற்சிகளில் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது.  
Disqus Comments
'