Tuesday, 30 July 2019

லீக்கான சன்னி லியோனின் மொபைல் நம்பர்...! தொடர் கால்களால் திணறிப்போன இளைஞர்


சன்னி லியோனின் மொபைல் நம்பர் என ஒரு தொலைபேசி எண் பாலிவுட் ரசிகர்களிடையே பரவிய நிலையில் அந்த எண்ணின் உரிமையாளர் படாத பாடு பட்ட சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

சன்னி லியோன் நடிப்பில் 'அர்ஜுன் பட்டியாலா' எனும் திரைப்படம் அண்மையில் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் தனது மொபைல் எண் எனக்கூறி நாயகனுக்கு சன்னி லியோன் ஒரு எண்ணை கூறுவார்.

இந்த காட்சிதான் தற்பொழுது டெல்லியை சேர்ந்த புனீத் எனும் 27 வயது வாலிபரை பெரும் தலைவலிக்கு ஆளாக்கி இருக்கிறது. அந்த திரைப்படத்தில் சன்னி லியோன் கூறிய மொபைல் எண் உண்மையில் புனீத் உடையது.

ஆனால் இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்களோ அதனை உண்மையான எண் என நினைத்து கால் செய்ய ஆரம்பிக்கவே நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட கால்களை அட்டென்ட் செய்து நொந்துவிட்டார் புனீத்.

பெரும்பாலும் திரைப்படங்களில் உபயோகத்தில் இல்லாத எண்ணை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த திரைப்படத்தில் பொறுப்பே இல்லாமல் புழக்கத்தில் உள்ள ஒரு எண்ணை உபயோகப்படுத்தி தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திய அர்ஜுன் பட்டியாலா படக்குழுவினர் மீது வழக்கு தொடுக்க இருக்கிறாராம் புனீத்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();