Thursday, 4 July 2019

பிளாஸ் பேக் வீடியோ: 27 பந்துகளில் 72 ரன்கள்..! அனல் பறக்க விட்ட சச்சினின் ஆட்டம்


நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் வெறும் 27 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய சச்சினின் அதிரடி ஆட்ட காணொளி இணையத்தங்களில் பட்டையை கிளப்பி வருகிறது.

2002 ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி, சூப்பர் மேக்ஸ் எனும் முற்றிலும் வேறுபட்ட போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் விளையாடியது.

10 ஓவர்களை கொண்ட இரண்டு இன்னிங்ஸ்களை ஒவ்வொரு அணியும் விளையாடுவதே இவ்வகை போட்டியின் சிறப்பம்சம்.  குறிப்பிட்ட போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரரான சச்சின் ருத்ரதாண்டவம் ஆடி 72 ரன்கள் குவித்தார்.

துரதிஷ்டவசமாக அந்த போட்டியில் இந்திய அணி தோற்ற போதிலும், அப்போட்டியில் சச்சினின் அதிரடி ஆட்டம் இன்றுவரை பேசப்படும் ஒன்றாக அமைந்துவிட்டது.




Disqus Comments
'