Wednesday, 17 July 2019

ரஜினியின் அரசியல் வாழ்க்கை டுமீல்..! பரபரப்பை கிளப்பும் வைரல் ஜோதிடர்


இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகள் குறித்தும் இந்தியாவின் தோல்வி குறித்தும் துல்லியமாக கணித்து இந்திய அளவில் பிரபலமாகி இருப்பவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.

கிரிக்கெட் மட்டுமல்லாது, கால்பந்து, இயற்கை சீற்றம், அரசியல் என பல்வேறு துறைகளிலும் தனது திறமையை காட்டி பலரையும் வாய்பிளக்க வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் இவர் தமிழ் சினிமா நடிகர்களின் அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்த தனது கணிப்புகள் பற்றியும் பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

இவர் கலந்து கொண்ட நேர்காணலில் இது குறித்து பேசிய பாலாஜி,  '2021ம் ஆண்டு அரசியலில் முழு ஈடுபாட்டுடன் ரஜினி களம் காணுவார். ஆனால் அவருக்கு போதிய வரவேற்பு  மக்களிடம் இருக்காது. அதன் பின் உடல் நலக்கோளாறு காரணமாக பிரச்சனைகளை சந்திப்பார், அதிலிருந்து மீண்டு வறுவதை பொறுத்துதான் அடுத்த கட்ட நகர்வை கணிக்க முடியும்.

நடிகர் விஜய் இன்னும் 5 வருடங்களுக்கு அரசியல் பக்கம் வர மாட்டார். நடிகர் அஜித் 100% அரசியலுக்கு வரவே மாட்டார்' என தெரிவித்து இருக்கிறார்.



Disqus Comments
'