Monday, 15 July 2019

"நான் 10 வனிதாவுக்கு சமம்" ஆக்ரோஷ ஆட்டத்தை ஆரம்பித்த மீரா


பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளின் ராணியாக விளங்கிய வனிதா வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் இடத்தை நிரப்ப முயற்சி செய்ய துவங்கி இருக்கிறார் மீரா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இதுவரை நிகழ்ந்த சண்டைகளுக்கு காரணமாக விளங்கியவர் போட்டியாளர் வனிதா. சிறிய பிரச்சனைகளையும் ஊதி பெருசாக்கி விடும் இவரது குணாதிசயத்தால் வீடே ரணகளமாகி போனது.

இப்படி இருக்க நேற்றைய எபிசோடில் எவருமே எதிர்பாராத விதமாக வனிதா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து 'கவின், சாண்டி உள்ளிட்ட போட்டியாளர்கள் மிகவும் பலமான போட்டியாளரான வனிதாவையே தூக்கி விட்டார்களே. இனி சண்டை போட ஆளே இல்லை' என பேசிக்கொண்டிருக்க,

மற்றொரு போட்டியாளரான மீரா மிதுன், அதான் நான் இருக்கிறேனே. இதுவரை பிறருக்கு மரியாதை கொடுத்து விலகி சென்று கொண்டிருந்தேன். இனி  அப்படி நடக்காது. யார் என்னை சீண்டினாலும் பச்சை பச்சையாக கேட்பேன்' என தெரிவித்து இந்தவாரமும் பிரச்சனைகள் இருப்பதை உறுதி படுத்தி இருக்கிறார். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();