Wednesday, 17 July 2019

அஜித்தை அடுத்து விஜய் ரசிகர்களையும் சீண்டிய கஸ்தூரி..! அய்யயோ அப்படியா சொன்னாரு..?


சமுக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு பெயர் போனவரான நடிகை கஸ்தூரி விஜய் ரசிகர்களை சீண்டி விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்.

சும்மாவே அவிங்களுக்கும் நமக்கு வாய்க்கா தகராறு எனும் வசனத்தை போல, அஜித் ரசிகர்களை அவ்வப்போது சீண்டி வசவுகளை வாங்கி கட்டி கொண்டவர் நடிகை கஸ்தூரி.

இப்படி இருக்க சமீபத்தில் லீக்கான நடிகர் விஜயின் பிகில் திரைப்பட பாடல் குறித்தும் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அட்லீ இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் திரைப்படம் பிகில்.

இத்திரைப்படத்திற்கு A.R. ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், அதன் ஒரு பாடல் இன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. 

இது ஒரு புறம் என்றால், நடிகை கஸ்தூரியோ வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல, ஏற்கனவே கேட்ட பாட்டுகளில் பிகில் சத்தத்தை மட்டுமே கூடுதலாக சேர்த்திருப்பதாக கூறி கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தார்.


கஸ்தூரியின் இந்த பதிவு விஜயின் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();