Thursday, 4 July 2019

'பீட்சா டெலிவரி' செய்ய ஆள் இல்லாமல் இயங்கும் கார்..! அசத்தும் அமெரிக்க நிறுவனம்


உலக புகழ் பெற்ற நிறுவனமான 'டாமினோஸ்', பீட்ஸா டெலிவரி செய்ய ஆளில்லாமல் இயங்கும் தானியங்கி வாகனங்களை உபயோகிக்க துவங்கியுள்ளது.

வளர்ந்து வரும் நவயுக தொழில்நுட்ப யுகத்தில், ஆச்சரியப்பட வைக்கும் தொழிநுட்பங்கள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றுள் சில வருடங்களுக்கு முன்பு, தானியங்கி கார்களுக்கான தொழிநுட்ப ஆராய்ச்சியை கூகுள் நிறுவனம் துவங்கி இருந்தது. அதில் முழுமையாகவும் அந்நிறுவனம் வெற்றி பெற்று விட்ட நிலையில், அமேரிக்கா போன்ற மேலை நாடுகளில் அவை உபயோகத்துக்கு வந்துள்ளன.

இந்நிலையில், பிரபல பீட்ஸா நிறுவனமான டொமினோஸ், பீட்ஸா டெலிவரிகளுக்கு தானியங்கி கார்களை உபயோகிக்க துவங்கி இருக்கிறது. அதற்கான முன்னோட்ட டெலிவரிகளை அந்நிறுவனம் அமெரிக்காவில் செய்து வரும் நிலையில், எதிர்காலத்தின் துவக்கத்தை காட்டும் காணொளி ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Credits : Viral Hog 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();