Friday, 21 June 2019

மகள் கேட்ட ஒரே கேள்வி...! பதறிப்போய் சினிமாவில் நடிக்க வைத்த விஜய் சேதுபதி


மகன் சூர்யாவை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் மகளான ஸ்ரீஜாவும் திரைத்துறையில் அறிமுகமாக இருக்கிறார்.

எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல், முன்னணி நடிகர் என்ற இடத்தை அடைந்து, பிற நடிகர்கள் ஏற்க தயங்கும் சவாலான வேடங்களையும் ஏற்று நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் நடிகர் விஜய் சேதுபதி.

இவரை தொடர்ந்து மகன் சூர்யாவும், நானும் ரௌடிதான், சிந்துபாத் ஆகிய திரைப்படங்களில் நடித்துவிட்டார். இந்நிலையில் தனது மகளையும் சங்க தமிழன் எனும் தன் படத்தின் மூலம் அறிமுகப்படுத்த இருக்கிறார்.

இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த விஜய் சேதுபதி, குறிப்பிட்ட படத்தில் தன் மகள் சிறிய காட்சியில் மட்டுமே தோன்றி இருக்கிறார் என்றும், தன் அண்ணனுக்கு மட்டும் எல்லா சுதந்திரமும் கிடைக்கிறது, என்ற எண்ணம் அவளுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே அதில் நடிக்க வைத்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

மேலும் இதற்கு முன்னதாகவே, அவரை பெண் குழந்தை என்பதால், சூர்யாவை போல தனியாக விளையாட, தான் அனுப்புவதில்லை என்றும், இதனால் ஒருமுறை 'நான் பெண்ணாக பிறந்ததால் தான்  விளையாட விட மறுக்குறீர்களா? என நேரடியாக கேட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்து, இந்த முடிவு குறித்து விளக்கி இருந்தார்.'
Disqus Comments
'