Friday, 21 June 2019

இப்படி ஒரு மோசமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்


தமிழ் சினிமாவை அடுத்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு என வெவ்வேறு மொழிகளில் விஜய் சேதுபதி நடிக்க துவங்கி இருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு திரைப்படம் ஒன்றிற்காக அவர் ஏற்று இருக்கும் கதாபாத்திரம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தோடு இருக்கும் விஜய் சேதுபதி, இளம் நடிகர்கள் கூட நடிக்க தயங்கும் வேடங்களில் நடித்து,

என் நடிப்பு திறமைக்கு தீனி போடும் எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிப்பேன் என மார்க்கெட் குறித்து கவலைப்படாமல் நடித்து வருகிறார்.

அந்த வரிசையில், உப்பெண்ணா எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுக நாயகி ஒருவருக்கு தந்தையாக நடிக்க ஒப்புதல் தெரிவித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

இதனால் பலரும், ஒரு முன்னனி ஹீரோ நாயகிக்கு தந்தையா நடிப்பதா? என கேள்வி எழுப்ப துவங்கியுள்ள நிலையில், சாதி-மதத்தில் நம்பிக்கை இல்லாத எனக்கு, சாதி வெறிபிடித்த தந்தை எனும் கதாபாத்திரம் சவாலாக இருக்கும் என்பதாலேயே ஒப்புக்கொண்டேன் என பதிலளித்து வருகிறார்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();