Wednesday, 12 June 2019

வடிவேலுவை சீண்டினால் யாருக்கும் மரியாதை கிடையாது..! கொதித்தெழுந்த ரசிகர்களால் அதிர்ச்சியில் திரையுலகம


வடிவேலுவுக்கு கண்டனம் தெரிவித்த பிரபல இயக்குனர்களை, ரசிகர்கள் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்பு போல சினிமாவில் நடிப்பதில்லை என்றாலும், கோடிக்கணக்கான ரசிகர்களை இன்றளவும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து கொண்டிருக்கும் நடிகர் வடிவேலு. இரட்டை அர்த்த வசனம் இன்றி இந்த தலைமுறை குழந்தைகளும் கண்டு ரசிக்கும் படி இவரது காமெடிகள் அமைந்திருக்கும் நிலையில்,

பாமர மக்களின் வலிகளையும் மறக்க செய்யும் வலி நிவாரணியாக பெரும் மதிப்பை மக்களிடையே சம்பாதித்து இருக்கிறார். 24ம் புலிகேசி திரைப்பட பிரச்சனையில் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் இவருக்கு திரைத்துறையினரிடம் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

அண்மையில் இவர் கலந்து கொண்ட நேர்காணலில், 'இயக்குனர் சிம்பு தேவனை ஒருமையில் பேசினார். சங்கரை இழிவு படுத்தி பேசினார்' என இயக்குனர் சமுத்திரக்கனி, சுசீந்திரன் உள்ளிட்ட பலர் வடிவேலுவுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இதனை கண்டு பொங்கி எழுந்த ரசிகர்கள் பலர், 'யார் மீது தவறு என்று எங்களுக்கு தெரியும். வடிவேலுவுக்கு கண்டனம் தெரிவிக்கும் எவருக்கும் இனி மரியாதை கிடையாது. என்ன நடந்தாலும் எங்கள் கைப்பிள்ளையை விட்டுக்கொடுக்க மாட்டோம்' என சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தனர்.

இதனால், இத்தனை வருடம் கழித்தும் ரசிகர்களிடையே வடிவேலுக்கு இருக்கும் பலத்த ஆதரவை கண்டு கதி கலங்கி போய் இருக்கின்றனர், கண்டனம் தெரிவித்த திரையுலகினர் பலர்.     
Disqus Comments
'