Thursday, 13 June 2019

இனிமே ஈவு இரக்கம் இன்றி கவர்ச்சி காட்டுவேன்..! தமன்னாவின் புதிய சபதம்


இனி, தான் நடிக்கும் படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு  உச்சக்கட்ட கவர்ச்சி காட்ட முடிவெடுத்து இருக்கிறாராம் நடிகை தமன்னா.

 தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை தமன்னாவின் மார்க்கெட் இடையே படுமோசமாக சரிந்தது.

படவாய்ப்புகளுக்காக நம்பி இருந்த திரையுலக நட்புவட்டாரங்களும் கழட்டிவிட்டு விட்டதால், அவ்வப்போது கிடைக்கும் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இறுதியாக அவர் நடிப்பில் வெளியான தேவி-2 திரைப்படம், எதிர்பார்த்த அளவு செல்லாத நிலையிலும், அதில் இடம்பெற்று இருந்த 'ரெடி ரெடி' எனும் பாடலில் அவர் காட்டிய கவர்ச்சி, திரையுலகினரின் பார்வையை தமன்னா பக்கம் விழ வைத்து இருக்கிறது.


இதனால், கவர்ச்சி வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் இவரை தேடி வர, குறிப்பிட்ட படங்களில் இயக்குனர்கள் சொல்வதை விட கூடுதலாக கவர்ச்சி காட்டி, படப்பிடிப்பு தளங்களில் சூட்டை கிளப்பி வருகிறாராம். 

இந்த திடீர் அதீத கவர்ச்சி குறித்து கேட்பவர்களிடம், 'முன்னணியில் இருந்த போது கவர்ச்சிக்கு நான் விதித்த கட்டுப்பாடுகளால்தான் வாய்ப்புகளை இழந்தேன் இனியும் அந்த தவறை செய்வதாக இல்லை' என விளக்கம் அளித்து வருகிறாராம். 


Disqus Comments
'