Monday, 17 June 2019

'சன் டிவி'யை கைகழுவிய ராதிகா..! புதிய சேனலுடன் ஒப்பந்தம்


வெள்ளித்திரையில்  மட்டுமல்லாது சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை ராதிகா. இவர் தனது ராடான் நிறுவனத்தின் மூலம் பல தொடர்களை தயாரித்து, இயக்கி, நடித்தும் வருகிறார்.

20 வருடங்களுக்கு மேலேயும் இவர் சன் நிறுவனத்திற்காக சீரியல்கள் கொடுத்து வந்த நிலையில், சன் நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, ஜீ தமிழ் நிறுவனத்துடன் கைகோர்த்து இருக்கிறார்.

சந்திர குமாரி எனும் வரலாற்று தொடர் ஒன்றினை, அவர் கொடுத்து வந்த நிலையில், அதன் ஒளிபரப்பு நேரத்தை தடாலடியாக சன் நிறுவனம் மாற்றியதில் ஏற்பட்ட மனக்கசப்பே, ராதிகாவின் இந்த முடிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.


இந்த மாற்றம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும் விரைவில், வேறு ஒரு தொலைக்காட்சியில் அவரை பார்க்கலாம் என்ற தகவல் மகிழ்ச்சியிலும் ஆதியுள்ளது.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();