Breaking News

படுக்கை அறையில் அதற்கு நோ..! ரகசியத்தை ரசிகர்களுடன் பிரியங்கா சோப்ரா!!!


இந்தியா சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் எனும் அமெரிக்க பாடகரை காதல் திருமணம் செய்து கொண்டார். 10 வயது இளையவர் ஆனாலும் சுமூகமாக இவர்களது திருமண உறவு சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த சுமூக பயணத்திற்கான சீக்ரட் குறித்து பகிர்ந்து இருக்கிறது இந்த நட்சத்திர தம்பதி. என்னதான் கோடிக்கணக்கான ரசிகர்கள், வேலை அழைப்புகள் என 24 மணி நேரமும் செல்போனை அருகிலேயே வைத்து கொள்ளும் கட்டாயத்தில் இருந்தாலும்,

இனிமேல் படுக்கை அறைக்குள் செல்போன்களுக்கு அனுமதி இல்லை என்ற விதியை போட்டு இருக்கிறாராம் நிக்ஜோனாஸ். பெரும்பாலானவர்கள் போல, 'செல்போனை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய முடியாதவராக தனக்கு ஆரம்பத்தில் இது அதிர்ச்சியை அளித்தது.

ஆனால், இந்த விதியின் மூலம் எப்போதும் இல்லாதபடி  ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்ள முடிந்தது. செல்போன் ஒருவரது வாழ்வில் எவ்வளவு இடையூறாக உள்ளது என்பதை இதன்மூலம் நான் புரிந்து கொண்டேன்' என கணவரின் இந்த விதி குறித்து பெருமையுடன் தெரிவித்து மற்றவர்களையும் கடைபிடிக்க சொல்கிறார் ப்ரியங்கா.