Friday, 21 June 2019

'நேர்கொண்ட பார்வை' விலை போகாதா..? பிரமாண்ட தொகைக்கு விற்று கெத்து காட்டும் போனிகபூர்


'நேர்கொண்ட பார்வை' கமெர்சியல் படம் அல்ல, கண்டிப்பாக தயாரிப்பாளர் எதிர்பார்க்கும் விலைக்கு போகாது' என விமர்சித்தவர்கள் வியக்கும் விலைக்கு விற்று காட்டி இருக்கிறார் தயாரிப்பாளர் போனிகபூர்.

விஜய்க்கு இணையாக பேசப்பட்டாலும் நடிகர் அஜித்தின் படங்களுக்கு விஜயை விட குறைவான தமிழ் விநியோக உரிமை தொகையே கிடைத்து வந்தது.

அஜித்துக்கு விஸ்வாசம் திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை அடுத்து, இந்த வழக்கத்தை மாற்றும் முடிவோடு களமிறங்கிய போனிகபூர், விஜயின் 63வது படத்திற்கு இணையான தொகையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை விற்பது என விடாப்பிடியாக இருந்தார்.

ஆரம்பத்தில் இவரின் இந்த முடிவு விமர்சனத்திற்கு ஆளானாலும், போனிகபூர் சொன்ன படியே சுமார் 75 கோடி ரூபாய்க்கு நேர்கொண்ட பார்வையின் தமிழக விநியோகஸ்த உரிமையை விற்று கெத்து காட்டி இருக்கிறார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();