Tuesday, 11 June 2019

திருமணத்துக்கு முன்னரே ஹனிமூன்.. ஜெட் வேகத்தில் நயன்-விக்கி ஜோடி


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நாயகர்களுக்கு ஊறுகா போல கவர்ச்சி காட்டி விட்டு மட்டும் சென்ற காலம் போய், நாயகர்களுக்கு இணையாக கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

கூடவே அடுத்தடுத்து காதல் சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர், தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனை இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகிறார்.

இருவருக்கும் ரகசிய திருமணம் முடிந்து விட்டது, திருமணம் செய்து கொள்ளாமலே குடும்பம் நடத்தி வருகின்றனர் என்றெல்லாம் செய்திகள் வெளியானாலும், இவை எதை பற்றியுமே கண்டுகொள்ளாமல் ஜாலியாக வெளிநாடு சுற்றி வருகின்றன இந்த காதல் பறவைகள்.

ஒவ்வொரு பட இடைவெளியிலும் காதலருடன் வெளிநாடு சுற்றுலா செல்லும் நயன், இம்முறை கிரீக்கில் உள்ள உலக புகழ் பெற்ற ஹனிமூன் நகரமான, திராவிற்கு விசிட் அடித்து இருக்கிறார்.



Disqus Comments
'