Monday, 24 June 2019

நாட்டுக்கு ரொம்ப முக்கியம்..! மீடியாக்களை சினிமா பிரபலங்களே கழுவி ஊத்திய சுவாரஸ்யம்


நடிகர் சங்க தேர்தலை தலைபோகும் பிரச்சனையாக ஒளிபரப்பு செய்த மீடியாக்களை சினிமா பிரபலங்களே கிண்டல் செய்த சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

பாக்யராஜ் மற்றும் நாசர் தலைமையிலான இரு அணிகளுக்கிடையேயான நடிகர் சங்க தேர்தல் நேற்று பல பிரச்சனைகளுடன் நிகழ்ந்தேறியது.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் சென்றுகொண்டிருக்க, தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் ஒன்று போல, இந்த தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து டிவி சேனல்களும் இந்த நிகழ்வை ஒளிபரப்பு செய்தது.

வாக்களிக்க வரும் ஒரு நடிக, நடிகையையும் விடாமல் போட்டி போட்டு டிவி சேனல்கள் கேள்வி கேட்க, 'பெரும்பாலான பிரபலங்கள் நாட்டிற்கு ரொம்ப அவசியமான தேர்தல் இது, உங்கள் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது' என பதிலளித்து மறைமுகமாக கலாய்த்து சென்றனர்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();