Monday, 17 June 2019

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? உங்க கணவருக்கு இல்லையா? சின்மயியை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்


பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மதுடு-2 திரைப்பட டீசர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மீட்டூ இயக்கம் மூலம் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு குரல் கொடுத்து வருபவர் பாடகி சின்மயி. இதனால் ஒருபுறம் பாராட்டுக்கள் குவித்தாலும், பிரபலத்திற்காக இதை செய்வதாக விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

இப்படி இருக்க பெண்ணுரிமை, பெண் மரியாதை என கூவி விட்டு, தன் கணவர் இயக்கிய பெண்களை இழிவு படுத்தும் திரைப்படமான 'மன்மதுடு-2' வை விளம்பரம் செய்வது ஏன் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


முன்னதாக நடிகைகளை கவர்ச்சியாக நடிக்க வைப்பது குறித்து விமர்சித்த சின்மயி, மகள் வயது நடிகைகளுடன், மூத்த நடிகர் லிப் லாக் முத்தம் கொடுக்கும் காட்சிகள் அடங்கிய இந்த திரைப்படதிற்கு முழு வேகத்தில் விளம்பரம் செய்து வருவதுதான் இந்த சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();