Friday, 21 June 2019

குழந்தைகளை சீரழிக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ஆப்பு!!! வருகிறது புதிய சட்டம்


ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில், குழந்தைகளை ஆபாசமாக பாட, ஆட வைத்து விளம்பரம் தேடும் டிவி சேனல்களுக்கு ஆப்பு வைக்கும் விதத்தில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட உள்ளது.

பாடல் நிகழ்ச்சி நடன நிகழ்ச்சி எனும் பெயரில், ஆபாச பாடல்களை பாட வைப்பதும், வயதுக்கு மீறிய உடல் அசைவுகளுடன் ஆட வைப்பதும் என சில டிவி சேனல்கள் வரம்பு மீறி வருவதை நாம் கண்கூடாகவே பார்க்க முடிகிறது.

TRPயை மட்டுமே குறிக்கோளாக வைத்து இயங்கும், இது போன்ற டிவி சேனல்களின் 'ரியாலிட்டி ஷோக்களுக்கு தடை விதிக்கவேண்டும்' என எழுந்த பல்லாயிரக்கணக்கான கோரிக்கைகளை அடுத்து, புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட உள்ளது.

அதன் படி, 18 வயதுக்கு குறைவானவர்களை வைத்து எந்த வித ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு டிவி சேனல்களுக்கு விதிக்கப்படலாம் என தெரிகிறது.

விரைவில் அமல்படுத்தப்பட உள்ள இந்த சட்டத்தினால், ஒரு புறம் மகிழ்ச்சிதான் என்றாலும், குழந்தைகளின் திறமையை உலகறிய செய்யும் நல்ல நிகழ்ச்சிகளும் இதனால் பாதிக்கப்படும் என்பதும் பலரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.  
Disqus Comments
'